சென்னையில் உள்ள ஒரகடம் என்னும் இடத்தில் சுமார் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 45 ஏக்கர் பரப்பளவில் புதிய மின்னணு உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதியை இன்று சந்தித்த பேசிய தாய்லாந்து-இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் அனுஷான் முட்டார்ட் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும், 'டெல்டா எனர்ஜி சிஸ்டம்' என்ற பெயரில் தொடங்கப்படும் இந்த மின்னணு உதிரி பாக தொழிற்சாலையில் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.