லட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கடந்த 20ஆம் தேதி உடல்நல குறைவின் காரணமாக காலமான கிறிஸ்தவ மத போதகர் டி.ஜி.எஸ். தினகரனின் உடல் இன்று நண்பகல் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராயப்போட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கிற்கு பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருந்த கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் அவரது மகன் பால் தினகரன், பேரன், பேத்திகள், கிறிஸ்தவ மத பாதிரியார்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், கல்லறை தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக அவருடைய பேரன், பேத்திகள் அவரது நினைவாக சிறப்பு பாடலை பாடினர். அதன் பின்னர் முறைப்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது.