சென்னை பாரிமுனை பகுதியில் ரசாயன கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
சென்னை பாரிமுனை நயினியப்பன் தெருவில் ரசாயனக் கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு பல்வேறு வகையான ரசாயனப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இங்கிருந்து இரவு 11 மணிக்கு கரும்புகை வெளிவந்துள்ளது. இதை பார்த்த கடையின் காவலாளி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து 25 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். எளிதில் தீப்பற்றக் கூடிய ரசாயன பொருட்கள் அங்கு இருந்ததால் தீயை அணைக்க வீரர்கள் போராடினர். இரவு 11.30 மணிக்கு துவங்கிய இந்த தீ அணைப்பு முயற்சி அதிகாலை 5.30 மணி வரை நீடித்தது. சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் லட்சக்கணக்கான மதிப்புள்ள ரசாயன பொருட்கள் எரிந்து சாம்லானது.
மின் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு யாரேனும் தீ வைத்தார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.