சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப மையத்திற்கு 2007-ம் ஆண்டிற்கான மிகச் சிறந்த கல்வி, பயிற்சி நிறுவன விருதை இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் வழங்கியுள்ளது.
சென்னை தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப மையம், ஜவுளித்துறை மேம்பாட்டிற்கு தொடர்ந்து தனது பங்களிப்பை தருவதற்கு இந்த விருது ஊக்கமும், ஆக்கமும் தரும் என்று அதன் இயக்குனர் எஸ்.தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த 2003ம் ஆண்டு முதல் ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பத்தில் தலைசிறந்து விளங்குவதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.