தமிழகத்தில் சீரமைக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மறு சீரமைக்கப்பட்ட புதிய தொகுதிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளும், 234 சட்டப் பேரவை தொகுதிகளும் உள்ளன.
தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ததில் தொகுதிகளின் எண்ணிக்கை மாறாமல் உள்ளது. ஆனால் சில தொகுதிகளில் உள்ள ஊர்கள் வேறொரு தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சில தொகுதிகளின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது.
மாற்றி அமைக்கப்பட்ட புதிய தொகுதிகளின் அடிப்படையில்தான் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்.