Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை தீவுத் திடல் பொருட்காட்சியில் இலவச சித்த மருத்துவ‌ம்!

சென்னை தீவுத் திடல் பொருட்காட்சியில் இலவச சித்த மருத்துவ‌ம்!
, புதன், 20 பிப்ரவரி 2008 (16:59 IST)
சென்னை தீவுத் திடலில் நடைபெற்றுவரும் சுற்றுலா பொருட்காட்சியில், அறநிலையத்துறை அரங்கில், இலவச சித்த மருத்துவமும், இலவச ஆலோசனையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை தீவுத்திடலில் நடைபெறும் இந்திய சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சியில் அரசுத்துறைகள் சார்பில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பிலான அரங்கு அமைந்துள்ளது. இந்த அரங்கில் திருக்கோவில் அமைப்பு, புராண நிகழ்ச்சிகள், வரலாற்று நிகழ்ச்சிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுநோக்குத் திட்டங்கள் போன்ற பலவற்றை சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை, இதுவரை சுமார் ஐந்து லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்து பயன்பெற்றுள்ளனர்.

கருணை இல்லம், முதியோர் இல்லம், கல்லூரிகள், பள்ளிகள் என பல்வேறு பொது நோக்குத் திட்டங்களை திருக்கோவில்கள் மூலம் நிறைவேற்றி வரும் இந்து சமய அறநிலையத்துறை சித்த மருத்துவச் சாலைகளையும், ஆங்கில மருத்துவச் சாலைகளையும் நடத்தி வருகின்றது. இந்த சித்த மருத்துவ முகாம் ஞாயிறு தோறும் இந்து சமய அறநிலையத்துறை அரங்கில் மாலை 4 மணியுடன் இரவு 8 மணிவரை நடைபெறுகிறது.

இம்முகாம் வடபழனி அருள்மிகு வடபழனியாண்டவர் திருக்கோவில் சார்பில் இயங்கும் சித்த மருத்துவமனை மூலம் நடத்தப்படுகிறது. இங்கு மருத்துவ ஆலோசனை பெறும் சுற்றுலா பயணிகள், தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக நடத்தப்பட்டு வரும் பழனி, சமயபுரம், மருதமலை, பண்ணாரி, திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்துர், திருச்சி குமாரவயலூர் ஆகிய இடங்களில் மருத்துவத்தை தொடரவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த கண்காட்சி அரங்கில் மேலும் சிறுவர், சிறுமிகளை ஊக்குவிக்கும் நோக்கோடு கண்காட்சியில் பார்வையிட்ட நிகழ்வுகளை கூறுவோர்க்கும் திருக்குறள் ஒப்புவிப்போருக்கும் கணித அளவீடு பெட்டி (ஜியாமெண்ட்ரி பாக்ஸ்) பேனா, போன்ற பரிசுப்பொருட்கள் நாள்தோறும் வழங்கப்படுகிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil