Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஜெயலலிதா!

திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஜெயலலிதா!
, புதன், 20 பிப்ரவரி 2008 (13:44 IST)
''‌விடுதலை‌ப் பு‌லிகளை ஆத‌ரி‌த்து பே‌சிய ‌திருமாவளவ‌ன் ‌மீது ஏ‌ன் ‌முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி நடவடி‌க்கை எடு‌க்க ‌வி‌ல்லை'' எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பொறுத்த வரை அவர்களது நோக்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. அ‌ந்த அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் வன்னிய அரசு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பகிரங்கமாக ஆயுதங்களையும், பலவிதமான பொருட்களையும் கடத்தும் செயலில் ஈடுபட்டு கைது செய்யப்படுகிறார். அன்றே விடுதலை செய்யப்படுகிறார்.

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறைத்தலைவர் அறிவிக்கிறார். ஆனால் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து கருத்துரிமை மாநாடு நடக்கின்றது. இந்த மாநாடு நடத்த காவல்துறை தலைவரின் அறிவிப்பையும், எச்சரிக்கையையும் மீறி யார் திருமாவளவனுக்கு அனுமதி கொடுத்தது. திருமாவளவனுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கும் நோக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதி செய்ய கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்?

திருமாவளவன் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதா? என்பதை எல்லாம் இந்த நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசின் முதலமைச்சராகிய கருணாநிதிக்கு நிச்சயம் உண்டு. என்னுடைய முக்கியமான கேள்விகள்-ரத்து செய்யப்பட்ட பொடா சட்டத்தை பற்றியே கருணாநிதி ஏன் பேசிக் கொண்டிருக்கிறார்? சட்டமன்றத்தில் பேசும் போது கூட, ரத்து செய்யப்பட்ட பொடா சட்டத்தை குறிப்பிட்டு, நடவடிக்கை எடுக்க சட்டப்படி வழியில்லை என்று ஏன் கூறினார்? தற்போது உள்ள சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துரைமுருகன் அறிவித்தார்.

அதன் பிறகு 25.1.2008 அன்று திருமாவளவன் பேசிய பேச்சுக்கு ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை? நடவடிக்கை எடுக் கப்படும் என்று 27.11.2007 அன்று காவல்துறை தலைமை இயக்குநர் அறிவித்து இருந்த போது, 25.1.2008 அன்று விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய திருமாவளவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இந்தக் கேள்விகளை கேட்டேன், அறிக்கைகள் வாயிலாகவும் திரும்பத் திரும்ப கேட்டு வருகின்றேன். ஆனால், இந்த நாள் வரை இந்த கேள்விகளுக்கு கருணாநிதியிடமிருந்து பதில் வரவில்லை எ‌ன்று ஜெயல‌லிதா கே‌ட்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil