Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சு‌ற்றுலா மே‌ம்பா‌ட்டு ப‌ணி‌க்கு தமிழக அரசு‌க்கு தேசிய விருதுகள்!

சு‌ற்றுலா மே‌ம்பா‌ட்டு ப‌ணி‌க்கு தமிழக அரசு‌க்கு தேசிய விருதுகள்!
, புதன், 20 பிப்ரவரி 2008 (10:45 IST)
தமிழக அரசின் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அந்த விருதுகள் 27ஆ‌ம் தேதி டெல்லியில் வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊரகச் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் செட்டிநாடு பகுதியில் சுற்றுலா மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் விவரங்களையும், சிறந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற அடிப்படையில் காஞ்‌சிபுரம் மாவட்டம், தண்டரை கிராமத்தில் உள்ள இருளர் பழங்குடி மகளிர் நல சங்கம், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஆற்றியுள்ள பணிகள் பற்றிய விவரங்களையும் 2006-07-ம் ஆண்டின் தேசிய விருதுகளுக்கான முன்மொழிவுகளாக மத்திய அரசுக்குத் தமிழக அரசு அனுப்பி வைத்தது.

அவற்றை ஆய்வு செய்த மத்திய அரசு சிறந்த ஊரகச் சுற்றுலாத் திட்டத்திற்காகத் தமிழகத்திற்கு ஒரு தேசிய விருதும், தலைசிறந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமான தண்டரை இருளர் பழங்குடி மகளிர் நல சங்கத்திற்கு மற்றொரு தேசிய விருதும் ஆக இரண்டு தேசிய விருதுகளைத் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.

இந்த விருதுகள் புதுடெல்லியில் விக்யான் பவனில் ‌‌பி‌ப்ரவ‌ரி 27ஆ‌ம் தேதி நடைபெற உள்ள விழாவில் வழங்கப்படவுள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil