Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விதிமுறைகளை மீறிய 62 ஆசிரியர் பயிற்சி பள்ளிக‌ள் மூட‌ப்படு‌‌கிறது!

விதிமுறைகளை மீறிய 62 ஆசிரியர் பயிற்சி பள்ளிக‌ள் மூட‌ப்படு‌‌கிறது!
, புதன், 20 பிப்ரவரி 2008 (09:47 IST)
''தமிழ்நாட்டில் விதிமுறைகளை மீறிய 62 ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ஆசிரியர் கல்வி பயிற்சி இயக்குனர் பெருமாள்சாமி கூ‌றினா‌ர்.

இது கு‌றி‌த்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்குனர் பெருமாள்சாமி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் கூறுகை‌யி‌ல், தமிழ்நாட்டில் சில தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்திடம் அங்கீகார ஆணை பெற்றிருந்தும், ‌வி‌தி‌ப்படி தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்காமல், மாணவ‌ர்களை அ‌ந்த ‌நிறுவன‌ங்க‌ள் தன்னிச்சையாக சேர்த்து உள்ளன. இதனா‌ல் அ‌ந்த மாண‌‌வ‌ர்க‌ள் தேர்வு எழுத தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.

இந்த ஆ‌ண்டு மதுரை தமிழ்த்தாய் ஆசிரியர் பயிற்சி பள்ளி, ஈரோடு விஷ்ணுலட்சுமி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கிருஷ்ணகிரி மருதமலையான் ஆசிரியர் பயிற்சி நிலையம், பவானி வித்யாலயா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கோவை டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திண்டுக்கல் கே.வி.கே.ஆசிரியர் பயிற்சி பள்ளி, தேனி இ.புதுப்பட்டி உமையாள் ஆசிரியர் பயிற்சி நிலையம்,

மதுரை பல்கலைநகர் தெய்வீக திருமகன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஈரோடு மருதப்பா மாரியம்மாள் ஆசிரியர் பயிற்சி பள்ளி, வேலூர் எஸ்.டி.ஏ.ஆர்.எம். ஆசிரியர் பயிற்சி பள்ளி, திருச்சி எம்.எஸ்.உதயமூர்த்தி ஆசிரியர் பயிற்சி பள்ளி, விருதுநகர் வி.பி.எம். ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகிய 12 ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் இருந்து 600 மாணவர்கள் தேர்வு எழுதமுடியவில்லை. இவர்கள் அனைவரும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டவர்கள்.

தகுதியில்லாத ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏற்ற எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்காமை, நிரந்தர கட்டிடத்திற்குப்பதில் கூரை கட்டிடம் இப்படி பல குறைபாடுகளுடன் 50 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இந்த 50 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மற்றும் ஏற்கனவே சொன்ன 12 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் சேர்த்து 62 ஆசிரியர்பயிற்சி பள்ளிகளின் அங்கீகாரத்தை நீக்கவும், தேவைப்பட்டால் மூடவும் தென்மண்டல தேசிய ஆசிரியர் கல்வி குழுவுக்கு பரிந்துரைக்கப்படும்.

இந்த பள்ளிகளில் அங்கீகாரத்துடன் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல தேர்வு எழுத முடியாத 600 மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தேர்வு எழுதமுடியாது. இனிமேலாவது பெற்றோர்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர்பயிற்சி நிறுவனத்திலோ அல்லது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திலோ உள்ள அங்கீகார ஆசிரியர்பயிற்சி பள்ளிகளின் பட்டியலை பார்த்து அங்கீகாரம் உள்ள பள்ளியில் சேர்த்திடுங்கள் எ‌ன்று பெருமா‌ள்சா‌மி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil