Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌ஜூ‌ன் மாத‌ம் அரசு கேபிள் டி.வி. தொடக்கம்!

‌‌ஜூ‌ன் மாத‌ம் அரசு கேபிள் டி.வி. தொடக்கம்!
, புதன், 20 பிப்ரவரி 2008 (09:36 IST)
ூன் 2-வது வாரத்தில் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பைத் தொடங்குவதற்கு அரசு முடிவு செய்து‌ள்ளது.

தமிழக அரசின் `அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்' அமைப்புக்காக, ஆலோசனை குழு ஒன்றை உருவாக்கி கடந்த 19.10.07 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆலோசனை குழுவின் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையிலநடந்தது. கூ‌ட்ட‌த்த‌ி‌ற்கு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பிரிஜேஷ்வர் சிங் தலைமை தாங்கினார். உள்துறை செயலாளர் எஸ்.மாலதி உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூ‌ட்ட‌த்‌தி‌ல் தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்க‌ம், தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க‌ம் ம‌ற்று‌ம் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட ‌தீ‌ர்மான‌ங்க‌ள் வருமாறு:

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மூலமாக முதல் கட்டமாக கோவை, நெல்லை, திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூரில் கட்டுப்பாட்டு அறைகள் (எம்.எஸ்.ஓ.) தொடங்கப்படுகின்றன. இவற்றை அமைப்பதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளைப் பெறுவதற்கு 12.3.08 அன்று கடைசி தேதியாக நிர்ணயிக்கப்படுகிறது.

ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டவுடன் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்கும் பணி தொடங்கும். வருகிற ஜுன் மாதத்தில் கேபிள் டி.வி. சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு தரமான சேவையை வழங்க அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் உறுதி பூண்டுள்ளது. இதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. படிப்படியாக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தச் சேவைகளை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை 'எம்.எஸ்.ஓ.' அனுமதி பெற மத்திய அரசிடம் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. சென்னையில் `காஸ்' திட்டம் (கன்டிசனல் ஆக்சஸ் சிஸ்டம்) நடைமுறையில் இருப்பதால், இந்த அனுமதியை பெறுவது அவசியமாகிறது. மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்த பின்னர் சென்னையிலும் இந்த சேவை தொடங்கப்படும்.

கேபிள் டி.வி. உரிமையாளர்கள் தங்களின் முழு ஒத்துழைப்பையும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு வரிச்சுமையை குறைப்பது குறித்து கோரிக்கைகள் பெறப்பட்டன. இவற்றை அரசு பரிசீலித்து தகுந்த முடிவுகள் எடுக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடைய கேபிள்களைத் துண்டிப்பது மற்றும் அவர்களை அச்சுறுத்துவது தொடர்பான புகார்கள் மீது சட்டப்படி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது எ‌ன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை, நெல்லை, தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தமிழக அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் `சென்ட்ரலைஸ்ட் கண்ட்ரோல் ரூம்' என்ற கட்டுப்பாட்டு அறையைத் தொடங்குகிறது.இத‌ன் மூலம் சென்னை தவிர தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு அனைத்து சேனல்களையும் வழங்க முடியும். மத்திய அரசின் அனுமதி கிடைத்த பிறகு சென்னையில் அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை மூலம், வாடிக்கையாளர்கள் அனைவரும் `செட்-ஆப் பாக்ஸ்' மூலம் அரசு கேபிள் இணைப்பை பெற வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil