''மலேசிய தமிழர்களுக்கு சம உரிமை கிடைப்பதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும்'' என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன், முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மலேசிய தமிழர்களுக்கு சம நீதி, சம உரிமை, சம வாய்ப்பு கிடைப்பதற்காக அனைத்து கட்சி தலைவர்கள், இயக்கத் தலைவர்கள் இடம்பெறும் நடவடிக்கை குழு ஒன்றை மூத்த அரசியல்வாதியான தாங்கள் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.