பழனி மலை முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மீண்டும் ரோப்கார் இயக்கப்பட உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக 2 பெட்டிகள் மட்டும் இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், மேல் தளத்தில் இருந்து 350 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டி ருந்த கீழ்தள டவர் அகற்றப்பட்டு 20 மீட்டர் இடைவெளியில் புதிய டவர் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை 50 மீட்டர் இடைவெளி தூரதத்தில் இயக்கப்பட்டு வந்த ரோப்கார் இனி 2 மீட்டர் தூர இடைவெளியில் இயக்கப்படும் என்றும் கீழ்தளத்தில் இருந்து இரண்டு நிமிடங்களில் கோவிலுக்கு செல்லும் வகையில் இது செயல்படும் என்றும் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி உயரத்தில் சென்று கொண்டிருந்த ரோப்கார் நடுவழியில் திடீரென்று அறுந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த நான்கு பக்தர்கள் பரிதாபமாக பலியானார்கள். இதையடுத்து ரோப்கார் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.