தமிழகத்தில் தனிநபர், சங்கங்கள் ஆதரவு மூலம் மாவட்ட அளவிலான இரத்த வங்கி கிளைகளை ஏற்படுத்த இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக பிரிவு திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி புதுக்கோட்டையில் ஞாயிறன்று நடைபெற்ற ஒரு விழாவில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளர் சாந்தா தியாஸ் பேசுகையில், விரைவில் தொடங்கப்பட உள்ள இந்த இரத்த வங்கியின் மாவட்ட கிளைகளுக்கு சமுதாயம் அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்றார்.
மேலும், இதற்கான கட்டடம் கட்டுவதற்கு மாநில அரசு இலவசமாக நிலம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாநில கிளை, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் இளைஞர் செஞ்சிலுவை இயக்கத்தை பலப்படுத்த வேண்டும் என்றும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வை இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.