இலங்கைக்கு 40 மூட்டை பீடி கடத்த முயன்ற மூன்று பேரை க்யூ பிராஞ்ச் காவல்துறையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் கடற்கரை பகுதிகளில் இன்று க்யூ பிராஞ்ச் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நாசியாராணி கடற்கரையில் வேன், ஆட்டோவில் இருந்து படகில் பொருட்களை ஒரு கும்பல் ஏற்றிக் கொண்டிருந்தது.
அப்போது, காவல்துறையினரை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அவர்களை காவல்துறையினர் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்த மருதுபாண்டி, ராமநாதபுரம் மாவட்டம் நாசியாராணியை சேர்ந்த கருப்பையா, அய்யாசாமி ஆகியோர் என தெரியவந்தது.
பின்னர் காவல்துறையினர் படகை சோதனை செய்தபோது அதில் 40 மூட்டை பீடி கட்டுகள் இருந்தது. மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய படகோட்டியை தேடி வருகின்றனர்.