Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடம்பரம் வேண்டாம், மக்க‌ளு‌க்கு நலப்பணிக‌ள் செ‌ய்யு‌ங்க‌ள்: மு.க.ஸ்டாலின்!

ஆடம்பரம் வேண்டாம், மக்க‌ளு‌க்கு நலப்பணிக‌ள் செ‌ய்யு‌ங்க‌ள்: மு.க.ஸ்டாலின்!
, செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (10:27 IST)
''எனது பிறந்த நாளில் ஆடம்பர செயல்களில் ஈடுபடாமல் மக்கள் பயன்பெறும் நலப்பணிகளில் ஈடுபடுங்கள்'' என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது கு‌றி‌த்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், மார்ச் முதல் நாளன்று எனது பிறந்த நாள் என்பதால், ‌தி.மு.க‌வினரு‌ம், இளைஞர் அணி நண்பர்களும் அதனைக் கொண்டாடுவதற்கு முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வாரம் அறிக்கை மூலமாக ஆடம்பர விளம்பரங்களைக் கழகத்தினர் தவிர்த்திட வேண்டுமென கட்டளையிட்டுள்ளார்கள். அதனைத் தவறாமலும், அணுவளவும் வழுவாமலும் பின்பற்றுவது நமது பொறுப்பும், கடமையும் ஆகும்.

தலைவரின் சொல்லே நமக்கு தாரக மந்திரம். அவரது கட்டளையைத் தலை மேற்கொண்டு அவர் இடும் பணிகளை ராணுவ வீரர்களைப் போல முழுமையுடன் நிறைவேற்றுவோம். ஆடம்பர விளம்பரங்களை மட்டுமல்ல; என்னுடைய பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடுவதையும் கட்டாயம் தவிர்த்திட வேண்டும் என்பது தான். அதற்குப் பதிலாக அனைவருக்கும் பயனளித்திடும் நற்பணிகள் மற்றும் சமூகப் பணிகளைச் செய்தால், அவற்றையே எனது பிறந்த நாள் வாழ்த்துகளாக ஏற்று எண்ணியெண்ணி மகிழ்ச்சி அடைவேன்.

ஏழை, எளிய பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கலாம். ரத்த தானம், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தலாம். ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதுடன், அறுசுவை உணவு படைத்திடலாம். ஆங்காங்கு கழகக் கொடியினைப் புதுப்பித்து ஏற்றி வைக்கலா‌ம் எ‌ன்று மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil