இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக போதிய மழை பெய்யாத காரணத்தால் குறிப்பாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் போதிய மழை பெய்யாத காரணத்தால் அணைக்கு வரும் தண்ணீர் குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே சென்றது. நேற்று அணையின் நீர்மட்டம் 93.84 அடி மட்டும் இருந்தது. அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் சகதி கழித்து 105 அடியாகும். அணைக்கு தற்போது வினாடிக்கு 2526 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வழியாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பவானிசாகர் அணையில் மீன்பிடிப்பு தொழில் சூடுபிடித்துள்ளது. இதனால் வெளியூர் சென்ற மீனவர்கள்
மீண்டும் பவானிசாகர் வந்து மீன்பிடிப்பு தொழிலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 கிலோ மீன்களுக்கு மேல் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.