ஜெயங்கொண்டம் அருகே இன்று காலையில் பேருந்தும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரியான்காவல் சர்க்கரை ஆலையில் இருந்து கரும்பு ஏற்றிக் கொண்டு இன்று டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது செந்துறையில் இருந்து வந்த தனியார் பேருந்து ஒன்று டிராக்டர் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் பேருந்தில் இருந்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.