''சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற கோரியும், ஆதி திராவிடர் , பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை பெற 60 விழுக்காடு மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டதை மத்திய அரசு கைவிடக் கோரியும் திராவிடர் கழகம் சார்பில் இன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றாவிட்டால் அடுத்து தொடர் போராட்டம் நடைபெறும் என்று வீரமணி எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான திராவிடர் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.