சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்குகின்றன.
மத்திய அரசு கல்வி வாரியம் நடத்தும் சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு தேர்வு மற்றும் 12-வது வகுப்பு தேர்வு கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு
10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வருமாறு:
மார்ச் 1ஆம் தேதி எலிமெண்ட்ரி ஆப் பிசினஸ், தட்டச்சு ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட தேர்வுகள்.
மார்ச் 3ஆம் தேதி சமூகஅறிவியல்.
5ஆம் தேதி தமிழ், பிரெஞ்சு, மலையாளம், உருது பஞ்சாபி உள்ளிட்ட மொழித்தேர்வுகள்.
7ஆம் தேதி தெலுங்கு, வங்காளம், அசாமிசி மனைஅறிவியல்
11ஆம் தேதி கணிதம்.
14ஆம் தேதி ஆங்கிலம் கம்யூனிகேசன், ஆங்கில இலக்கியம்
17ஆம் தேதி இந்தி
19ஆம் தேதி கம்யூனிகேசன் சமஸ்கிருதம்
20ஆம் தேதி இசை தேர்வுகள்
24ஆம் தேதி ஓவியம்
25ஆம் தேதி அறிவியல்
27ஆம் தேதி அறிவியல் செய்முறை திறமை
இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
12ஆம் வகுப்பு
சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வு கால அட்டவணை வருமாறு:
மார்ச் 1ஆம் தேதி வேதியியல், தொழில் பாடதேர்வுகள்
3ஆம் தேதி அலங்காரம் பற்றிய கல்வி
4ஆம் தேதி வர்த்தக படிப்பு
5ஆம் தேதி வரலாறு
7ஆம் தேதி இயற்பியல் உள்ளிட்ட தேர்வுகள்
8ஆம் தேதி அரசியல் அறிவியல்
10ஆம் தேதி ஆங்கில விருப்பபாடம் உள்ளிட்ட ஆங்கில பாடங்கள்
11ஆம் தேதி பரதநாட்டியம், கதகளி, குச்சிப்புடி, மணிபுரி, ஒடிசி, மோகினியாட்டம் உள்ளிட்ட தேர்வுகள்
12ஆம் தேதி மனைஅறிவியல், மராத்தி மிஸோ தேர்வுகள்
13ஆம் தேதி அக்கவுண்டன்சி, சிவில் என்ஜினீயரிங், ஆட்டோ என்ஜினீயரிங், மைக்ரோ பயாலஜி உள்ளிட்ட தேர்வுகள்
14ஆம் தேதி தத்துவஇயல், ஜெர்மன், தொழில் முனைவோர்படிப்பு
15ஆம் தேதி உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள்
17ஆம் தேதி சமூகவியல், பயோ டெக்னாலஜி, விவசாயம்
18ஆம் தேதி பஞ்சாபி, மணிபுரி
19ஆம் தேதி உருது விருப்பப்பாடம் மற்றும் இசை தேர்வுகள்
20ஆம் தேதி கணிதம்
24ஆம் தேதி உடற்கல்வி.
25ஆம் தேதி ஓவியம், கிராபிக்ஸ், சிற்பவியல், வர்த்தக கலை தேர்வுகள்
26ஆம் தேதி பொருளாதாரம்
27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழித்தேர்வுகள்
28ஆம் தேதி மனோதத்துவம் தகவல் தொழில்நுட்பம்
29ஆம் தேதி இந்தி விருப்பபாடம் உள்ளிட்ட மொழித்தேர்வுகள்
31ஆம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ்.
ஏப்ரல் 2ஆம் தேதி புவியியல், என்ஜினீயரிங் டிராயிங்.
மேற்கண்டவாறு தேர்வு அட்டவணை சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. தலைவர் அசோக் கங்குலி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த மார்ச் தேர்வில் 10 மற்றும் 12-வது வகுப்பு மாணவர்களுக்கு சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் புதிய முறையில் 20 விழுக்காடு மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அதில் 10 விழுக்காடு குறுகிய அளவில் விடை அளிக்கக்கூடிய வினாக்களாக இருக்கும்.
இந்த வருடம் 10-வது வகுப்பு தேர்வை 7 லட்சத்து 65 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். புதிய தேர்வு முறையில் 12-வது வகுப்பு தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். புதிய தேர்வு முறையால் மாணவர்களின் சிந்திக்கும் திறனை அலசி ஆராய முடியும். இதுவரை ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்கு தேர்வு எழுத 3 முறை அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய தேர்வு முறையால் இனிமேல் 5 முறை வழங்கப்படும் என்றார் அசோக் கங்கூலி.