இராமநாதபுரம் அருகே அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்து விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைக்கு அனந்தூரில் இருந்து வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து தொட்டமங்கலம் அருகே வந்து கொண்டிருந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 12 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஒட்டுநர் வேகமாக இயக்கியது தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் முத்துப்பாண்டியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.