விமானம் வழியாக கூரியர் பார்சல் மூலம் 760 கிலோ ஹெராயின் கடத்த முயன்ற நைஜிரியாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.76 லட்சம் ஆகும்.
நைஜிரியா நாட்டை சேர்ந்த ஒருவர், புளு கலரில் உள்ள கார்பன் பேப்பரில் உள் பகுதியிலும் வெளிப் பகுதியிலும் ஆறு பாலிதீன் பைகளில் 760 கிலோ ஹெராயினை கனடாவிற்கு கூரியர் மூலம் அனுப்பியுள்ளார்.
இந்த பார்சலை கனடாவிற்கு அனுப்புவதற்காக சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், அந்த பார்சலை பிரித்து பார்த்தனர்.
அப்போது, 760 கிலோ ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச மதிப்பில் இவற்றின் மதிப்பு ரூ.76 லட்சம் ஆகும்.
இந்த பார்சலை அனுப்பியவர் நைஜிரியாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் 2007ஆம் ஆண்டு இதேபோல் 5 பார்சல்களை அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.