Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யானைக‌ள் ப‌லி எ‌திரொ‌லி: சத்தி வனப்பகுதியில் இரயில் பாதை அமைப்பதில் சிக்கல்!

வேலு‌ச்சா‌மி

யானைக‌ள் ப‌லி எ‌திரொ‌லி: சத்தி வனப்பகுதியில் இரயில் பாதை அமைப்பதில் சிக்கல்!
, புதன், 13 பிப்ரவரி 2008 (12:56 IST)
கோவையில் இரயிலில் மோதி மூன்று காட்டுயானைகள் பரிதாபமாக இறந்த சம்பவத்தை கருத்தில்கொண்டு சத்தி வனப்பகுதியில் இரயில் பாதை அமைப்பதில் சிக்கில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து சத்தியமங்கலம் வரை இரயில் போக்குவரத்து ஏற்படுத்துவது தன் அரசியல் வாழ்வின் லட்சியம் என மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறி வருகிறார். இந்த திட்டத்தை தனது தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளார். இதில் தமிழக வனப்பகுதி சத்தி வனக்கோட்டத்திற்குட்பட்ட 58 கி.மீ., ூரம் வனப்பகுதியில் இரயில் பாதை அமைக்க ஆய்வு பணிக்கே கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அனுமதி மறுக்கப்பட்டதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டினார்.

webdunia photoWD
இதையடுத்து தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி வந்தபிறகும் இந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாய் இருந்துவந்தது. வனப்பகுதியில் இரயில்பாதை வந்தால் காட்டு யானைகளுக்கு பெரிதும் ஆபத்து ஏற்படும் என்றும் இதனால் வனத்தின் தன்மை மாறி சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் வன ஆர்வாளர்கள் நீதிமன்றம் வரை சென்றனர். பின் இதுகுறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் தனி குழு அமைத்து அந்த குழு சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடந்த ஆ‌ண்டு ஆய்வு நடத்தி சென்றது.

இந்த நிலையில் தமிழக வனப்பகுதியில் 58 கி.மீ. ூரத்திற்கு ஆய்வு செய்ய உரிய அனுமதி வழங்கப்பட்டதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன் சத்தியமங்கலம் வந்த வனத்துறை அமைச்சர் செல்வராஜ், செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறினார். அப்படியெனில் பாதை அமைத்து இரயில் போக்குவரத்து வந்து செல்ல வனத்துறை அனுமதி கொடுக்குமா என்று கேட்டதற்கு விருந்திற்கு வரசொல்லியாகிவிட்டது இனி உணவு பரிமாமலா விட்டுவிடுவோம் என இரயில்பாதை கட்டாயம் அமையும் என்பதை சூசகமாக கூறினார்.

இந்த நிலையில் தமிழகத்திலேயே சத்தியமங்கலம் வனப்பகுதியில்தான் யானைகள் அதிகமாக காண‌ப்படு‌கி‌ன்றன என சமீபகாலத்தில் எடுக்கப்பட்ட வனவிலங்குகள் எண்ணிக்கையில் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றனர். இப்படியிருக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோவை மதுக்கரை பகுதியில் இரயில்பாதையை கடக்க முயன்ற மூன்று யானைகள் இரயில் அடிபட்டு கொடூரமாக இறந்தது. இதில் க‌ர்‌ப்பமாக இருந்த பெண் யானையின் வயிற்றில் இருந்த கு‌ட்டியு‌ம் பரிதாபமாக இறந்தது.

இதனால் சாம்ராஜ்நகர்- சத்தியமங்கலம் இரயில் திட்டம் நிறைவேறினால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ வாய்ப்புள்ளதாக வன ஆர்வாளர்கள் மீண்டும் போர்கொடி ூக்கியுள்ளனர்.

இது குறித்து கோவை ஓசை சுற்றுசூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறுகை‌யி‌ல், தமிழகத்தில் சத்தியமங்கலம் காட்டில் மட்டுமே யானைகள் அதிகமாக அதாவது 800 யானைகள் வசித்து வருகிறது. இதுதவிர தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து வருடத்திற்கு ஒரு முறை பவானிசாகர் வன‌ச் சரகத்திற்குட்பட்ட தெங்குமரஹடா வனப்பகுதியில் யானைகள் ஒன்று கூடி நின் பல்வேறு இடங்களுக்கு பிரிந்து செல்லும்.

இந்த வழியாகத்தான் இரயில்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது நடக்குமானால் அன்றாடம் யானைகளின் மரணம் நிகழும் நிலை ஏற்படும். இது ஒருபுறத்தில் இருக்க மற்றொறு புறத்தில் காட்டுக்குள் இருக்கும் யானைகள் இரயில் போக்குவரத்து ஏற்படும் நிலையில் விளைநிலங்களுக்கு வந்துவிடும். இதனால் மோயாறு மற்றும் பவானி ஆறு பகுதியில் இருக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

இரயில்பாதை கட்டாயம் என்னும் சமயத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம், கோபி வழியாக ஈரோட்டிற்கு இரயில் பாதை அமைத்தால் ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், சென்னைக்கும் சுலபமாக செல்லமுடியும். ஆகவே நாட்டையும், காட்டையும் நம் வீட்டையும் பாதுகாக்க சத்தியமங்கலம் வனத்தின் வழியாக இரயில்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் எ‌ன்று காளிதாசன் கூறினார்.

இது குறித்து சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் எல்.பி.தர்மலிங்கம் கூறுகை‌யி‌ல், வனப்பகுதிக்குள் இரயில்பாதை செல்வதால் விலங்குகளுக்கு ஆபத்து என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும். தற்போது இந்த வனப்பகுதி வழியாகத்தான் தேசிய நெடுஞ்சாலை 209 பெங்களூருக்கு சென்று கொண்டுள்ளது. இதுவரை பேரு‌ந்து மோதி ஒரு விலங்கு கூட இறந்ததாக தெரியவில்லை. ஆகவே நாட்டின் நலன்கருதி சத்தியமங்கலத்தின் வளர்ச்சி கருதி சாம்ராஜ்நகர்- சத்தியமங்கலம் இரயில்திட்டம் நிறைவேற அனைவரும் ஆதரவு தரவேண்டும் எ‌ன்றா‌ர்.

மொத்தத்தில் சாம்ராஜ்நகர்- சத்தியமங்கலம் இரயில்வே திட்டம் அரசியல் காரணமாக தாமதம் ஆனாலும் ஒரு பக்கம் எதிர்ப்பும் ஒரு பக்கம் ஆதரவும் பெருகி வருகிறது. இரயில் திட்டம் வருமா இல்லையா என்ற இறுதி முடிவு தமிழக முதல்வர் கருணாநிதியின் கையில் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்னின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil