தமிழக முன்னாள் அமைச்சரும், பேரவைத் தலைவருமான க. ராசாராம் நீண்ட நாள் உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் இன்று தனியார் மருத்துவமனையில் காலமானார்.
82 வயதான அவர் தனது மகனின் பராமரிப்பபில் இருந்து வந்தார். இந்நிலையில் கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இருந்தாலும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று மாலை அவர் காலமானார்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன், முதலமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் மூன்று முறை அமைச்சராக பதவி வகித்து வந்த அவர். கடந்த 1980-84 ம் ஆண்டுகளில சட்டப்பேரவைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். தொழிற்துறை, தொழிலாளர் துறை, உணவுத்துறை ஆகிய துறைகளில் சிறப்பான சேவைபுரிந்து உள்ளார்.
ராஜாராம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் உறுப்பினராக இருந்துள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.