தமிழர்களின் நீண்டநாள் கனவான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி ஒரு போதும் தடையாக இருக்காது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
தமிழக மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி ஒரு போதும் தடையாக இருக்காது.
சில அரசியல் கட்சிகள் அரசியல் உள் நோக்கத்தோடு சேது சமுத்திர திட்டம் பற்றி தவறான தகவல்களை அளித்து வருகின்றன. சேது திட்டம் சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
அனைத்து மக்களின் எண்ணங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். என்று கூறிய அவர் சேது சமுத்திரம் திட்டம் பற்றி அம்பிகாசோனி கூறியது பற்றி கேட்டதற்கு அது அவரது சொந்த கருத்து என்று கூறினார்.