''சென்னை மாநகராட்சியில் உள்ள முக்கிய பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் 'யோகா மேடை' அமைக்கப்படும்'' என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், ''சென்னை மாநகராட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகில் ரூ.1 லட்சம் செலவில் ஆயிரம் சதுர அடியில் யோகா மேடை கட்டப்பட்டு வருகிறது. பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அமைக்கப்படும் இந்த மேடை 15 நாட்களில் கட்டி முடிக்கப்படும்'' என்றார்.
மேலும், நேரு பூங்கா, திரு.வி.கே.பூங்கா, அகத்தியர் நகரில் உள்ள விளையாட்டுத் திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யோகா மேடை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், சென்னை மாநகராட்சியில் உள்ள இதர முக்கிய பூங்காக்களிலும் யோகா மேடை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார் மேயர் சுப்பிரமணியன்.