Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு‌ப் பண‌ம் செல‌வ‌ழி‌க்‌க‌ப்பட‌வி‌ல்லை: ஆ‌ற்காடு ‌‌வீராசா‌மி!

அரசு‌ப் பண‌ம் செல‌வ‌ழி‌க்‌க‌ப்பட‌வி‌ல்லை: ஆ‌ற்காடு ‌‌வீராசா‌மி!
, வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (09:58 IST)
முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி‌க்கு பாரா‌ட்டு ‌விழாவு‌க்கு ஜெயல‌லிதா கூறுவதுபோல் மக்களின் வரிப் பணமோ, அரசுப் பணமோ எந்த வகையிலும் செலவழிக்கப்படவில்லை'' எ‌ன்று அமைச்ச‌ர் ஆ‌ற்காடு வீராசாமி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அ‌றி‌க்கை‌யி‌‌ல், வளர்ப்பு மகன் திருமணத்துக்காக 15 நாள்களுக்கு முன்பே அலங்கார விளக்குகள் போடப்பட்டு, மாநாட்டுப் பந்தலைப் போல் திருமணப் பந்தல் போடப்படவில்லையா? அரசு விழாவில் கலந்துகொள்ள ஒரு மாவட்டத்துக்கு ஜெயலலிதா செல்லும்போது, அந்த நகரமே அலங்கரிக்கப்படவில்லையா? அரை மணி நேரம் நடைபெறும் விழாவுக்காக பத்து நாள்களுக்கு முன்பே விழா ஏற்பாடுகள் நடைபெறவில்லையா?

ஆனால், தை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்காக முதல்வருக்கு நடத்தப்படும் பாராட்டு விழா அரசாங்க விழா அல்ல. அரசு சார்பில் பணம் செலவழிக்கப் போவதுமில்லை. மின் அலங்காரம் செய்வோர் அந்த விளக்குகள் எரிகின்றனவா என்று சோதனை செய்யும் நேரத்தில் பார்த்துவிட்டு, நான்கு நாள்களுக்கு முன்னரே அலங்காரம் செய்யலாமா என்று ஜெயலலிதா கேள்வி எழுப்புகிறார்.

அவர் கூறுவதுபோல் மக்களின் வரிப் பணமோ, அரசுப் பணமோ இந்த விழாவுக்கு எந்த வகையிலும் செலவழிக்கப்படவில்லை. கருணாநிதிக்குத் தரப்படும் பாராட்டினை கண்டு மனம் பொறுக்காத காரணத்தால், இதுபோல் கூறிவருகிறார் எ‌ன்று ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil