சேலம் சட்ட கல்லூரி மாணவர்கள் 78 பேரை நேற்று கைது செய்ததை கண்டித்து, சென்னை அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் 50 பேர் இன்று கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையினை பெறுவதற்கு ஆதி திராவிடர் மாணவர்கள் குறைந்த பட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து, சென்னை வந்த சேலம் சட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தலைமைச்செயலகம் நோக்கி ஊர்வலம் நடத்தி மத்திய அரசின் இந்த அறிவிப்பை தடுத்து நிறுத்த கோரி மனு கொடுக்க முயற்சி செய்தனர்.இதனால், காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.
இதனைக்கண்டித்து, சென்னை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் இன்று கல்லூரியின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.