போலி கடவுச் சீட்டு மூலம் கொழும்பில் இருந்து லண்டன் செல்ல முயன்ற இலங்கை வாலிபரையும், அவரை வழியனுப்ப வந்தவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சிறிலங்காவை சேர்ந்த ரோகன் (32) என்பவர் கொழும்பில் இருந்து விமானம் மூலம் லண்டன் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரது கடவுச் சீட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ரோகன் வைத்திருந்தது போலி கடவுச் சீட்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் ரோகனை கைது செய்தனர். ரோகனை வழியனுப்புவதற்காக விமான நிலையம் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் காதர் (35) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், ரோகனுக்கு போலி கடவுச் சீட்டு தயாரித்து கொடுத்த அப்துல் காதர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.