தமிழ்வழி கல்வி மூலம் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறும் முதல் 1,000 மாணவ, மாணவிகளுக்கு கணினி லேப்டாப் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் கூறியதாவது:
பள்ளி படிப்பை முடித்து விட்டு செல்லும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் கல்வி அளிப்பது தொடர்பாக சிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள 6,650 பள்ளிகளுக்கு கணினி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் வழி கல்வி மூலம் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறும் முதல் 1,000 மாணவ-மாணவிகளுக்கு கணினி லேப்டாப் இலவசமாக வழங்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.