தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படாது என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சமீப காலமாக ஒரு சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் விடுதலை புலிகளின் செயல்பாட்டுக்கு ஆதரவு தேடுகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு தேடுவது என்பது இளைய தலைமுறையினருக்கு ஆயுதங்கள், வன்முறைகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி விடும். இதைத்தான் காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்பதை யாரும் கற்பனையில் கூட நினைத்து பார்க்க வேண்டாம். மதசார்பற்ற ஆட்சி, இந்தியாவின் வளர்ச்சி, தமிழகத்தின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த கூட்டணி உருவாகி உள்ளது என்று அவர் கூறினார்.