தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவியரை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் வெளிர் நீல நிறத்தில் வண்ணம் பூசப்படவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியரை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் வெளிர் நீல வண்ணம் பூசப்பட வேண்டும். பள்ளிப் பேருந்து என்ற முத்திரை, படத்துடன் பொறிக்கப்பட வேண்டும்.
மேலும், இந்தத் திருத்தம் தொடர்பாக கருத்தோ, எதிர்ப்போ தெரிவிப்பதாக இருந்தால் 9ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம். அதன் பின்னர் இத்திட்டம் இறுதி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.