அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய சாலை மறியலில் 3,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சைதாப்பேட்டையில் சி.ஐ.டி.யு. தமிழ் மாநில செயலாளர் செளந்திரராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்கக் கோரி முழக்கமிட்டனர். பின்னர் சாலை மறியலில் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தமிழ்மாநில செயலாளர் வரதராஜன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சையில் பொதுக்குழு உறுப்பினர் வீரைய்யன் தலைமையில் நடந்த மறியலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதே போல் தமிழகம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் 3,00க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.