தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் சென்னை பயணிகள் இரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது.
இரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் வழக்கமான சோதனையில் ஈடுபடுவது வழக்கம். மீனம்பாக்கம்- திரிசூலம் இரயில் நிலையங்களுக்கு இடையே சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
இது குறித்து உடனடியாக மீனம்பாக்கம் இரயில்வே நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு வந்து கொண்டிருந்த பயணிகள் இரயில் உடனடியாக மீனம்பாக்கம் இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உடனடியாக சரி செய்யப்பட்டது. இந்த விரிசலால் 40 நிமிடம் இரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.