போலி கடவுச் சீட்டு மூலம் கொழும்பில் இருந்து சென்னை வந்த இலங்கை தமிழர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பொழிச்சலூரில் வசித்து வந்தவர் நக்கீரன் (40). இலங்கைத் தமிழரான இவர் சில ஆண்டுகளாக கொழும்பிற்கு சென்று மசாலா பொருட்களை விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தார் நக்கீரன். அப்போது அவரது கடவுச் சீட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் நக்கீரன் வைத்திருந்தது போலி கடவு சீட்டு என்று தெரியவந்தது.
இதையடுத்து நக்கீரனை காவல்துறையிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளத் தோணியில் இலங்கை சென்று வந்ததும், சில ஆண்டுகளாக போலி கடவுச் சீட்டு மூலம் கொழும்பு சென்று வந்தது தெரியவந்தது.