கச்சத் தீவை மீட்க கோரி பா.ம.க. சார்பில் ராமேஸ்வரத்தில் நாளை போராட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் போது, இலங்கை கடற்படையினர் மீனவர்களை கடத்திச் செல்வதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்தியா- இலங்கை ஒப்பந்தத்திலும் நமது மீனவர்கள் கச்சத் தீவு பகுதியில் வலையை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் நமது மீனவர்களை பாதுகாத்திடவும், அவர்களது உரிமையை நிலைநாட்டவும் கச்சத் தீவை மீட்டெடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று ஜி.கே.மணி கூறியுள்ளார்.