திருச்சி மாவட்டத்தில் மூன்று இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகள் மூட்டி 95 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. சீறி வந்த காளையை வாலிபர்கள் அடக்க முயன்றனர். இதில் 30 பேர் காளை முட்டி காயம் அடைந்தனர். அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தனது காளையை கொண்டு வந்த காட்டுக்குடிபட்டியை சேர்ந்த பழனிச்சாமி (54) என்பவர் நெஞ்சு வலி ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
இதேபோல் லால்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் 30 பேரும், சின்ன சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டியில் 35 பேரும் காயம் அடைந்தனர். இலேசான காயம் அடைந்தவர்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.