இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி. ராஜா வலியுறுத்தியுள்ளார்.
நாகை, திருவாரூர் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கை தமிழர் பிரச்சினையில் ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது. இப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா முயற்சி எடுக்க வேண்டும்.
மேலும், கச்சத்தீவு பகுதியில் தடையின்றி மீன் பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.