விடுதலைப்புலிகளை ஆதரிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததற்காக முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகளை ஆதரிப்போர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கடந்த 28ஆம் தேதியன்று முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதோடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களும் இதை வலியுறுத்தினார்கள்.
காங்கிரஸ் தலைவர்கள், தோழர்களின் இந்த வேதனையான உணர்வை ஏற்று விடுதலைப்புலிகளை ஆதரித்து எந்த செயல்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பினை சட்டப்பேரவையில் அறிவித்ததற்காக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.