காந்தியடிகளின் 60வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக இன்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி கடைபிடிக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ மேடையில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், தலைமை செயலக ஊழியர்கள் அனைவரும் ராணுவ பயிற்சி மைதானத்திற்கு வருகை தந்தனர். முதல்வர் கருணாநிதி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி வாசகங்களை முதலமைச்சர் கருணாநிதி வாசித்தார். அதை அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த உறுதி ஏற்பு நிகழ்ச்சிக்காக இன்று காலை 10.45 மணி முதல் 11.15 மணி வரை தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டது.