சிறிலங்காவில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரத்திற்கு வந்த மூன்று இலங்கை தமிழர்களை கியூ பிராஞ்ச் காவல்துறையினர் கைது செய்தனர்.
சிறிலங்காவில் இருந்து ஸ்ரீதர், குமார், அரசு ஆகிய மூன்று பேர் ராமேஸ்வரம் அருகே உள்ள சம்பை என்ற இடத்திற்கு படகு மூலம் வந்துள்ளனர்.
அவர்கள் மூவரையும் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையில் ராணுவத்தினருக்கும், தமிழீழ விடுதலைப்புலிக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், கடலோரப் பகுதியில் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.