மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற சிறுபான்மையின மாணவ-மாணவியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படித்த ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் வரை உள்ள சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெறும் மாணவர்கள் முந்தைய ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 2007-08ஆம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.
உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் ரூ.20 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் (நாளை) பள்ளி, கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.minorityoffairs.gov.in/newsite என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.