Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தை முத‌ல் நா‌ள் 'த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு' ச‌ட்ட மு‌ன்வடிவு ‌நிறைவே‌றியது!

தை முத‌ல் நா‌ள் 'த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு' ச‌ட்ட மு‌ன்வடிவு ‌நிறைவே‌றியது!
, செவ்வாய், 29 ஜனவரி 2008 (17:32 IST)
முதலநாளை தமிழபுத்தாண்டாஅறிவிக்வகசெய்யுமபுதிசட்ட மு‌ன்வடிவை சட்ட‌பேரவை‌யி‌லமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இன்றதாக்கலசெய்தார்.

சித்திரமுதல்நாளமுதலபங்குனி மாதமஇறுதி வரையிலுமஇதுநா‌ளவரதமிழ்ப் புத்தாண்டாஇருந்து வந்தது. இனிமேலமுதலநாளமுதலமார்கழி இறுதி வரதமிழ்ப் புத்தாண்டாஇருக்வகசெய்யுமசட்டமஒன்றகொண்டவருவதற்கஅரசமுடிவசெய்திருப்பதாஇந்த ச‌ட்ட மு‌ன்வடிவை தாக்கலசெய்முதலமைச்சரகருணாநிதி தெரிவித்தார்.

சட்ட‌பேரவை‌யி‌லஇன்று முதலமைச்சர் கருணாநிதி தமிழ்புத்தாண்டு மாற்றம் தொடர்பான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தை மாதம் முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என்பது எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மையாகும். எனவே தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்புத்தாண்டு தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்தி இந்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் பொருட்டு சட்டம் இயற்ற இந்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டமுன் வடிவு மேல் சொன்ன முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்க விளைகிறது.

இந்த சட்ட முன்வடிவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: தமிழ் திங்களான தைத் திங்கள் முதல் நாளானது தமிழ்புத்தாண்டு தினமாக கொண்டாடபடுதல் வேண்டும்.

தமிழ் ஆண்டானது தமிழ் மாதமான தைத்திங்கள் முதலாம் நாளன்று தொடங்கி தமிழ் மாதமான மார்கழி திங்கள் கடைசி நாளுடன் முடி வடைதல் வேண்டும்.

அனைத்து அரசு அலுவலகங்களும், வாரியங்கள், கழகங்கள், தொழில் துறை, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அதிகார அமைப்பு ஆகியவையும் தமிழ் ஆண்டினை பின்பற்ற வேண்டும்.

அனைத்து அரசு ஆணைகள் தமிழ்நாடு அரசிதழ், மாவட்ட அரசிதழ்கள் பிற அரசு வெளியீடுகள் ஆகியவற்றில் ஆங்கில ஆள்காட்டி நாளுடன் சேர்ந்து தமிழ் ஆண்டும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

இந்த சட்டத்தின் வகை முறைகளை செயல்படுத்துவதில் இடற்பாடு ஏதேனும் எழுமானால் அரசானது தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணை ஒன்றின் மூலமாக அந்த இடற்பாட்டை நீக்க தேவையான வழிமுறைகளை செய்யலாம்.

Share this Story:

Follow Webdunia tamil