Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி.ஆர்.பாலுவை அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌‌‌லிரு‌ந்து ‌நீ‌க்க வே‌ண்டு‌ம் : ஜெயலலிதா!

டி.ஆர்.பாலுவை அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌‌‌லிரு‌ந்து ‌நீ‌க்க வே‌ண்டு‌ம் : ஜெயலலிதா!
, ஞாயிறு, 27 ஜனவரி 2008 (12:41 IST)
சேது சமு‌த்‌திர‌ ‌தி‌ட்ட‌ம் தொட‌ர்பாக பே‌ட்டி அ‌ளி‌த்த இ‌ந்‌திய கட‌ற்படை தலைவரை ‌மிர‌ட்டிய ம‌‌த்‌‌திய அமை‌ச்‌ச‌ர் டி.ஆ‌ர்.பாலுவை பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 22.1.2008 அன்று சென்னையில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் கரீஷ் மேத்தா, "சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அந்த கால்வாய் வழியாக சிறிய கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். பெரிய கப்பல்கள் சென்று வருவதற்கு வாய்ப்பு இல்லை'' என்று கூறியிருந்தார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் இதே கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் பாதுகாப்பு கருதி சேதுசமுத்திர கால்வாய் திட்டம் குறித்து அச்சமின்றி தனது தொழில்நுட்ப கருத்தை இந்திய நாட்டின் கடற்படை தலைவர் வெளியிட்டுள்ளார்.

கடற்படைத்தலைவரின் பேட்டியை கண்டவுடன், மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு, பாதுகாப்புத்துறை அமை‌ச்ச‌ர் ஏ.கே.அந்தோணிக்கு எழுதிய கடிதத்தில் கடற்படையின் தலைமை பொறுப்பில் உள்ளவர் இது போன்று பேட்டி அளித்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும், அவரது கருத்து தேவையற்றது என்றும், ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும், எனவே தனது பேட்டியில் கூறியதை வாபஸ் பெற கடற்படை தலைவருக்கு அறிவுருத்த வேண்டும் என்றும் கடிதம் எழுதியுள்ளார்.

சர்ச்சைக்குரிய சேது சமுத்திர கால்வாய் திட்டம் குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது ஒரு துறையை சேர்ந்த மத்திய அமைச்சர் மற்றொரு துறையை சேர்ந்த அதிகாரி குறித்து அந்த துறை சம்பந்தப்பட்ட மத்திய அமை‌ச்சருக்கு நேரடியாக கடிதம் எழுதுவது என்பது நடத்தை விதிமுறைக்கு புறம்பான வரம்பு மீறிய செயலாகும். இதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அமைச்சரவை விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் மத்திய அமைச்சரவைக்கும், இந்திய பிரதமருக்கும்தான் உண்டு. டி.ஆர்.பாலுவின் செயல் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கே எதிரான செயலாகும்.

டி.ஆர்.பாலு என்ன கடற்படை பொறியாளரா? எந்த கல்லூரியில் கடல் போக்குவரத்து தொடர்பான பொறியியல் பட்டம் பெற்றார்? இந்தியாவின் ராணுவ அமைச்சரா? சுயேச்சையான இந்திய நாட்டின் கடற்படைத் தளபதியின் தொழில்நுட்பக்கருத்தை தட்டிக்கேட்கும் அரசமைப்பு அதிகாரத்தை டி.ஆர்.பாலுவுக்கு கொடுத்தது யார்? போன்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன. இந்திய கடற்படை தலைவரை மிரட்டும் வகையில் நடந்து கொண்ட டி.ஆர்.பாலு மீது இந்திய பிரதமரும், மத்திய அமைச்சரவையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடனடியாக மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil