சிறிலங்கா கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை உடனடியாக மீட்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த வியாழக்கிழமை அன்று மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிறிலங்கா கடற்படையினர் 3 படகுகளையும் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் 12 மீனவர்களை பிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறிலங்கா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிறிலங்கா கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 12 மீனவர்களையும் மத்திய- மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக மீட்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.