Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு: ‌ஆளுன‌ர் உரையில் அறிவிப்பு!

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு: ‌ஆளுன‌ர் உரையில் அறிவிப்பு!
, புதன், 23 ஜனவரி 2008 (12:24 IST)
தைத் திங்கள் முதல் நாளையே தமி‌ழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட த‌மிழஅரசமுடிவு செ‌ய்துள்ளதாஆளுந‌ரஉரை‌யி‌லஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌மிழக‌சச‌ட்ட‌பபேரவை‌யி‌னஇ‌ந்ஆ‌ண்டி‌னமுத‌லகூ‌ட்ட‌மஇ‌ன்றதொட‌ங்‌கியது. இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌லஆளுந‌ரசு‌ர்‌ஜி‌த் ‌சி‌ஙப‌ர்னாலா ‌‌நிக‌ழ்‌த்‌திஉரை‌யி‌‌ன் ‌விவர‌மவருமாறு:

பெருமபுலவரும், தனித்தமி‌இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில், ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921-ஆம் ஆண்டு சென்னை-பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தமிழர்களுக்கென்று ஒரு ‘தனி ஆண்டு’ தேவை என்றகருதி, அ‌ய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே ‘தமி‌ஆண்டு’எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்கள்.

அந்தக் கருத்தினை, முப்பத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பே முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, 1971-ஆம் ஆண்டு முதல் தமி‌ழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972-ஆம் ஆண்டு முதல் தமி‌ழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார். திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமி‌ழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாததமி‌ழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளையே தமி‌ழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செ‌ய்துள்ளது.

எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடிவரும் தமிடிநநாட்டு மக்கள்; இனி - தமி‌ழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகி‌ழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமி‌இல்லங்கள் புது எழில் காட்டிட; புத்தாடை புனைந்து தமி‌‌ழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும் ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமி‌ழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகி‌ழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர்.

இவ்வாறு ஆளுந‌ர் உரையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil