தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம், ஊழியர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பணம் கிடைக்கும்.
அனைத்து அரசுத் துறைகளிலும் முறையான ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங்களின் வரையறுக்கப்படாத விகிதத்தில் ஊதியம் (நாண்-ஸ்டான்டர்ட்) பெறும் ஊழியர்கள், அரசுத் துறைகள், வாரியங்களில் வழக்கமான ஊதியம் பெறுவோர், வரையறுக்கப்படாத விகிதத்தில் ஊதியம் பெறுவோர், அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர் இத்திட்டத்தில் பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு தமிழக அரசின் இணையதளத்தில் தகவல்களை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.