திருச்சியில் வீட்டை உடைத்து 150 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
திருச்சியை சேர்ந்தவர் முத்துசாமி. பொங்கல் பண்டிகையையொட்டி இவர் தனது சொந்த ஊரான கரூருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இந்த நிலையில் பொங்கல் முடிந்து நேற்று இரவு முத்துசாமியும், அவரது மருமகன் கண்ணனும் திருச்சி வந்தனர்.
வீட்டிற்கு வந்த இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது, வீட்டின் ஒரு பகுதி உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 150 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணம், மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.