சென்னையில் இன்று ஏற்பட்ட புகை, பனி மூட்டத்தால் 12 விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
போலி பண்டிகையையொட்டி சென்னைமுழுவதும் இன்று புகை மூட்டமாக காட்சி அளித்தது. அதுமட்டுமின்றி கடும் பனி மூட்டமும் காணப்பட்டது.
இதனால் சென்னைவிமான நிலையத்தில் இருந்து இன்று செல்ல இருந்த டெல்லி, கொல்கட்டா, மும்பை, மதுரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, வெங்கடபதி, தமிழக அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டனர்.