Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு: பிரிட்டிஷ் கவுன்சில் அழைப்பு

இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு: பிரிட்டிஷ் கவுன்சில் அழைப்பு
, திங்கள், 14 ஜனவரி 2008 (15:51 IST)
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் புவியில் ஏற்பட்டுவரும் தட்பவெட்ப மாற்றங்கள் குறிப்பிடத்தக்கது. காடுகள் அழிக்கப்படுவதால் பூமியில் உஷ்ணம் அதிகரிக்கிறது. இதுவே இயற்கை பேரழிவுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை முதலில் பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேணடியது அவசியம்.

இதுகுறித்து இந்திய இளைஞர்களை தீவிரமாக சிந்திக்க வைத்து, அதன்மூலம் நாட்டு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரிட்டிஷ் கவுன்சில் 'தி இந்தியன் கிளைமேட் சேம்பியன் 2008' எனும் தேசிய அளவிலான போட்டியை நடத்துகிறது.

இதுகுறித்து பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதிலும் நடத்தப்படும் இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 20 இளம் இந்தியர்களுக்கு புத்தகங்கள், டிவிடிக்கள் வழங்கப்படும். அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் விஞ்ஞானிகள், நிபுணர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வார இறுதி நாட்களில் முகாம்களுக்கும் அழைத்து செல்லப்படுகின்றனர்.

இவ்வாறு பயிற்சி அளிக்கப்படும் 20 பேரில் மூன்று பேர் 'இன்டர்நேஷன்ல் கிளைமேட் சேம்பியன் 2008' ஆக தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் லண்டன், ஜப்பானில் நடைபெற உள்ள கருத்தரங்குகளில் இந்தியாவின் பிரதிநிதிகளாக பங்கேற்கும் வாய்ப்பை பெறுகினறனர். இதற்கான அனைத்து செலவுகளையும் பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்கிறது.

லண்டனில் மார்ச் 24 முதல் 30ம் தேதி வரையிலும், ஜப்பானில் மே மாதம் 18 முதல் 26ம் தேதி வரையிலும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. ஜப்பானின் கோப் பகுதியில் நடக்கும் கருத்தரங்கில் ஜி-8 நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்று காலநிலை மாற்றங்கள் குறித்து விவாதிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பங்கேற்ப்பதற்கான விதிமுறைகள்:

'தி இந்தியன் கிளைமேட் சேம்பியன் 2008' போட்டியில் பங்கேற்க 14 முதல் 16 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தட்பவெட்ப மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகளை வெளிக்கொணர, 'தி இந்தியன் கிளைமேட் சேம்பியன் 2008' போட்டியை தேர்வு செய்ததற்கான காரணங்கள் குறுத்து 300 வார்த்தைகளில் குறிப்பிட வேண்டும்.
தட்பவெட்ப மாறுபாட்டால் இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த 800 வார்த்தைகளிலான செய்தி கட்டுரையையும் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். செய்தி கட்டுரை, கருத்துக்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய இறுதி நாள்: பிப்ரவரி 4ம் தேதி, 2008.
மேலும் விபரங்களுக்கு: www.britishcouncil.org.in

Share this Story:

Follow Webdunia tamil