சென்னை வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பகல் 1.05 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார். அவருடன் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத்தும் சென்றிருந்தார்.
போயஸ் கார்டன் இல்லத்தில் நரேந்திரமோடி நுழைந்ததும் ஜெயலலிதா அவருக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்றார். மோடியும் பதில் வணக்கம் தெரிவித்து ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்தார். அப்போது மோடி, ஜெயலலிதாவுக்கு குருவாயூர் கோயில் பிரசாதம் அடங்கிய பையை அளித்தார்.
பின்னர் ஜெயலலிதாவும், மோடியும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் ஜெயலலிதா அளித்த மதிய விருந்தில் மோடி கலந்துகொண்டார்.